பஹல்காம் தாக்குதலின் எதிரொலி: பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகளில் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்..!
Echoes of the Pahalgam attack People in countries around the world take to the streets to protest against Pakistan
ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது திடீரென நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் நாட்டை கொந்தளிப்பை ஆழ்த்தியுள்ளது. மத்திய அரசு பதிலடி கொடுக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், இந்த பயங்கரவாத சம்பவத்தை கண்டித்து அண்டைய நாடான நேபாளம் அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டனில் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து இந்தியர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 02 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அதில் நேபாளத்தை சேர்ந்தவர் ஒருவர் அடங்குவார். இதனை அடுத்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாகவும், பாகிஸ்தானியர்கள் வெளியேறவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானை கண்டித்து உலகின் பல நாடுகளில் போராட்டம் நடைபெறுகிறது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்தியர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

அத்துடன், ஆஸ்திரேலியாவிலும் பாகிஸ்தானை கண்டிக்கும் வகையில் பல வாசகங்களை கொண்ட பதாகைகளை ஏந்திய இந்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தானை கண்டித்து கோஷமும் எழுப்பினர்.
மேலும்,நமது அண்டை நாடான நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்தியர்கள் மற்றும் அந்நாட்டை சேர்ந்தவர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பாகிஸ்தான் ராணுவ தளபதியின் உருவப்படத்தை எரித்ததோடு, பாகிஸ்தானை கண்டித்து கோஷங்களை எழுப்பிய அவர்கள், பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அனைவரும் ஒன்று பட வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Echoes of the Pahalgam attack People in countries around the world take to the streets to protest against Pakistan