முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானது - உயர்நீதிமன்றம் கண்டனம்!
Chennai HC Condemn to CV Shanmugam
முதலமைச்சர் பற்றிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானதுதான் என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
2022ம் ஆண்டு விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் குறித்து சி.வி.சண்முகம் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், சி.வி.சண்முகத்தின் பேச்சை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மோசமான பேச்சு இது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
வழக்கும், வழக்கின் பின்னணியும்:
கடந்த 2022 ஆம் ஆண்டு, அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அதிமுகவின் மாவட்டச் செயலாளராக இருந்த சி.வி சண்முகம் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது தமிழக அரசையும், முதலமைச்சர் முக ஸ்டாலினையும் அவதூறாக சில வார்த்தைகளை பேசியதாக சொல்லப்படுகிறது.
இது குறித்த அவதூறு வழக்கு விழுப்புரம் மாவட்டம் முதன்மை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் நேரில் ஆஜராகிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே சிவி சண்முகம் தரப்பில் இந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்ய கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, முதலமைச்சர் குறித்து சி.வி சண்முகம் பேசியது மோசமானது என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனத்தை தெரிவித்தது.
மேலும் இந்த வழக்கின் தீர்ப்பை தேடி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.
English Summary
Chennai HC Condemn to CV Shanmugam