இது தவறு! தமிழக அரசுக்கு குட்டு - வசமாக சிக்கும் திமுக எம்எல்ஏக்கள்! தீர்ப்பளிக்க போகும் உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கொண்டுச் சென்றதாக மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் சிலர் மீது தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறும் திமுக அரசின் முடிவை எதிர்க்கும் அதிமுகவின் வழக்கு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.


கடந்த 2017-ல் அதிமுக ஆட்சியில் இருந்தபோது, தற்போதைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்காவை எடுத்து வந்ததாக ‌ உயர் நீதிமன்றத்திற்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

உரிமை குழுவின் இந்த நோட்டீசை உயர் நீதிமன்றம் தொடர்ந்து இருமுறை ரத்து செய்தது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அதிமுக சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் ‌மேல்முறையீடு செய்யப்பட்டது. 

அதிமுகவின் இந்த மேல்முறையீடு வழக்கு விசாரணை பல்வேறு காலங்களில் நடந்து வரும் நிலையில், கடந்த மாதம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய  அமர்வின் முன் விசாரணைக்கு விசாரணைக்கு வந்தபோது,  சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் தொடரப்பட்டுள்ள இந்த மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெற அனுமதி கோரி அரசு தரப்பில் வாதம் தொடரப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதிகள், முந்தைய ஆட்சியில் சட்டப்பேரவைச் செயலாளர் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தற்போது ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு திரும்ப பெற வேண்டி அனுமதி கோருவது நியாயமற்றது மற்றும் அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பானது என்று பதில் அளித்தனர்.

மேலும், அரசு தரப்பினரை பார்த்து முந்தைய ஆட்சியில் தொழிலாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை நீங்கள் திரும்பப் பெறுவீர்களா என்று கேள்வி எழுப்பியதை தொடர்ந்து உங்கள் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கை திரும்ப பெற அனுமதித்தால் அனைவரும் இதே போன்று கோரிக்கைகளை வைப்பார்கள் என்று தெரிவித்திருந்தனர். 

இந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் முடிவு தவறு என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai HC DMK Govt For ADMk Govt Case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->