கேரள மருத்துவக் கழிவு விவகாரத்தில் இருவர் கைது!  - Seithipunal
Seithipunal



மருத்துவக் கழிவு விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருவதாக, நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், புகார் வரப்பற்ற இடம் மட்டுமில்லாமல் வேறு பகுதிகளில் ஏதேனும் கொட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து சிறப்பு குழுக்கள் அமைத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது அதில் ஒரு இடத்தில் கண்டறியப்பட்டு அதிலும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் அனைத்து விவரங்களும் அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  இந்நிகழ்வில் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. 

முதல்முறையாக பொது சொத்து சேதம் விளைவித்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் பிணையில் வெளியே வர இயலாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முதல் முறையாக கழிவுகள் எந்த எந்த நிறுவனங்களில் இருந்து உருவானதோ அந்த நிறுவனங்கள் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அறிவுறுத்தி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.  

முதல்முறையாக பசுமை தீர்ப்பாயத்தால் கழிவுகளை கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியமே கழிவுகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு வாசக்கட்டுப்பாட்டு வாரிய மற்றும் அரசின் தொடர் முயற்சிகள் முக்கிய காரணமாகும். எத்தனையோ இடங்களில் இதுபோல கழிவுகள் கொட்டப்பட்டு இருக்கலாம் 

ஆனால் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் தான் முதல் முறையாக இவ்வளவு கடுமையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து நெல்லையில் கொட்டிய விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கழிவுகளை கொட்டும் விவகாரத்தில் தலைமை ஏஜெண்டாக செயல்பட்ட நெல்லையை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nellai Kerala medical waste Arrest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->