தேர்வு நேரத்தில் கோவில்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்த கூடாது - உயர்நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள ஜாரிகொண்டாலம்பட்டி கிராமத்தில் சர்வசித்தி விநாயகர், மாரியம்மன், காளியம்மன், முனியப்பன் உள்ளிட்ட கோவில்கள் உள்ளது.

இந்தக் கோவில்களில் பொதுத் தேர்வு நேரத்தில் பங்குனி திருவிழா நடத்துவதற்கு தடை விதிக்கவும், தேர்வுகள் முடியும் வரை திருவிழாக்களை தள்ளிவைப்பதற்கும் உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றுத் தாக்கல் செய்ய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கோவில் திருவிழாக்களின் போது ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுவதால், தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே தேர்வுகள் முடியும் வரை திருவிழாக்களை தள்ளி வைக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டது. 

இதையடுத்து தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேர்வு நேரங்களில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது என்பாத்து உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கடந்த 2019-ம் ஆண்டே பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

இதைத் தொடர்ந்து விழாக்குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2019ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவை கண்டிப்புடன் பின்பற்றுவதாக தெரிவித்தார். 

இதை பதிவு செய்த நீதிபதிகள், "பங்குனி திருவிழாவை பங்குனி மாதத்தில்தான் நடத்த முடியும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் படிப்பதற்கு சுமூகமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தேர்வு நேரங்களில் திருவிழாக்களில் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்' என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai high court order avaoid loudspeaker in temple festival for exam time


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->