ஜகா வாங்கிய செந்தில்பாலாஜி! வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!
Chennai High Court Senthil Balaji Case withdraw
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனு திரும்ப பெறப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு ஜூன் மாதம் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கடந்த 14 மாதங்களாக சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜியின் ஜாமின் மேல்முறையீடு மனு விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
அதே சமயத்தில் செந்தில் பாலாஜியின் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு முடிந்து சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கூடுதல் மனுவாக, அமலாக்கத்துறை பதிந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இதற்கிடையே செந்தில்பாலாஜி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. மேலும் வழக்கின் விசாரணையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி மேல்முறையீடு செய்த மனுவை திரும்ப பெறுவதாக செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
இதனை அடுத்து இந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
Chennai High Court Senthil Balaji Case withdraw