ரகசிய தகவலை சேகரித்து வைக்கும் பார் ஓஎஸ் மென்பொருள் - சென்னை ஐ.ஐ.டி உருவாக்கம்.!
chennai IIT provide cell phone software in users
நாட்டில் செல்போன் வைத்திருக்கும் 100 கோடி பயனாளிகளும் பயன்பெறும் வகையில் செல்போனில் பயன்படுத்தக் கூடிய வகையிலான "பார் ஓஎஸ்'' என்று அழைக்கப்படும் மென்பொருளை சென்னை ஐ.ஐ.டி.யின் தொழில் ஊக்குவிப்பு நிறுவனமான பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் உருவாக்கியுள்ளது.
செல்போன்களில் பதிவேற்றம் செய்ய கூடிய இந்த மென்பொருளை பயனாளிகள் ரகசிய தகவல் தொடர்புகள் தேவைப்படும் இடங்களில் சில முக்கிய தகவல்களை இந்த மென்பொருளின் மூலமாக பயனாளிகள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம்.
தற்போது இந்த மென்பொருள் சேவைகள், தனி உரிமை மற்றும் பாதுகாப்புத் தேவைகளை கொண்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மென்பொருளில் பயனாளிகள் தனியார் 5ஜி நெட்வொர்க் மூலம் தனியார் கிளவுட் சேவைகளை அணுக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மென்பொருள் சேவைக்கு குறித்து, சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி தெரிவித்ததாவது, "நமது நாட்டில் பார் ஓஎஸ் மென்பொருளை ஏற்றுக்கொள்ளவும், அதன் பயன்பாட்டை அதிகரிக்கவும், பல தனியார் மற்றும் அரசு தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்து நெருக்கமாக பணியாற்ற சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம் ஆர்வம் கொண்டுள்ளது" என்றுத் தெரிவித்தார்.
English Summary
chennai IIT provide cell phone software in users