கரையை கடக்க போகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! தமிழகத்தில் வலுவான தரைக்காற்று! 7 நாட்களுக்கு மழை! - Seithipunal
Seithipunal


சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில், நேற்று (31-08-2024) மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, இன்று காலை (31-08-2024) 05:30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். 

இது மேலும் 08:30 மணி அளவில் அதே பகுதியில், விசாகபட்டினத்திற்கு (ஆந்திர பிரதேசம்) கிழக்கே 120 கி.மீ தொலைவிலும், கலிங்கபட்டினத்திற்கு(ஆந்திர பிரதேசம்) தெற்கு-தென்கிழக்கே 80 கி.மீ தொலைவிலும், கோபால்பூர் (ஒடிசா) தெற்கு- தென்மேற்காக 180 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. 

இது மேலும், வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, விசாகப்பட்டினம்- கோபால்பூர் இடையே கலிங்கபட்டினத்திற்கு அருகில் இன்று (31-08-2024) நள்ளிரவு கரையை கடக்க கூடும்.

இதன் காரணமா இன்று முதல் வரும் 02.09.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வடதமிழகத்தில் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

03.09.2024 முதல் 06.09.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai IMD Tamilnbadu Weather Report 31 08 2024


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->