#சென்னை | ரூ.3000, அடிதடி, வழக்கு! 10 வழக்கறிஞருடன் காவல்நிலையம் வந்த கல்லூரி மாணவி!
Chennai Kodampakkam College girls fight
சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பகுதி நேர வேலையில் கிடைத்த பணத்தை பள்ளி தோழியின் கூகுள் பே விற்கு அனுப்பி திருப்பி கேட்டதால் நிகழ்ந்த சோகம்!
சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவியையும், அவருடைய ஆண் நண்பரையும் , இளம்பெண் ஒருவர் தனது கூட்டாளிகளை அழைத்து வந்து தாக்கிய சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது .
சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த 21 வயதான இளம் பெண் ஒருவர் கல்லூரி படித்துக் கொண்டே தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 1ம் தேதி தன்னுடைய மருத்துவ செலவிற்காக தான் பணிபுரியும் நிறுவன மேலாளரிடம் 3000 ரூபாய் கடனாக கேட்டுள்ளார். இந்த பணத்தை மாணவியின் கூகுள் பேவிற்கு நிறுவன மேலாளர் அனுப்ப முயற்சி செய்துள்ளார்.
பணம் போகாததால் தன்னுடைய பள்ளி தோழி வெண்மணி நம்பருக்கு அனுப்புமாறு மாணவி கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து மேலாளர் அனுப்பிய பணத்தை எடுத்துக்கொண்டு மூன்று நாட்களாக திருப்பி தர வெண்மணி இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த கல்லூரி மாணவி தனது கூட்டாளிகளை அழைத்துக் கொண்டு வெண்மனியையும் அவரது ஆண் நண்பரையும் கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளார்.
இந்த நிகழ்வுகளை எல்லாம் அங்கிருந்த பயணிகள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இது குறித்து ரயில்வே போலீஸ் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், இந்த வழக்கு குறித்து மாணவி வெண்மணி 10 வழக்கறிஞர்களுடன் காவல் நிலையம் வந்ததாக கூறப்படுகிறது.
English Summary
Chennai Kodampakkam College girls fight