சென்னை : குடி போதையில் போலீசின் கை விரலை கடித்து குதறிய குடிகார வழக்கறிஞர்.!
CHENNAI KODUNGAIYUR POLICE ATTACK
சென்னை தண்டையார்பேட்டை அருகே, மதுபோதையில் ரகளை செய்த நபரை போலீஸார் தட்டிக் கேட்ட போது, போலீசாரின் கை விரலை கடித்து குதறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
தண்டையார்பேட்டை அடுத்த கொடுங்கையூர் பகுதியின் பேக்கரி ஒன்றில் மதுபோதையில் வழக்கறிஞர் ஒருவர் தகராறு செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தலைமை காவலர் மாயக்கண்ணன் மற்றும் லோகநாதன் ஆகிய போலீசார், மதுபோதையில் வழக்கறிஞர் சுரேஷ் குமார் என்பவர் ஆபாசமான வார்த்தைகள் பேசி ரகளை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து சுரேஷ்குமார் போலீசார் சமாதானம் செய்ய முற்பட்டபோது, போலீசார் மீதும் தாக்குதல் நடத்த சுரேஷ்குமார் முற்பட்டார். மேலும் ஆபாசமான வார்த்தைகளால் போலீஸ்காரர்களை பேசியுள்ளார்.
இதனையடுத்து வழக்கறிஞர் சுரேஷ் குமாரை கைது செய்த போலீசார், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அழைத்துச் சென்றனர். அப்போது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் இருந்த காவலர் பாபு, சுரேஷ் குமாருக்கு அறிவுரை கூறவே, ஆத்திரமடைந்த குடிகார வழக்கறிஞர் சுரேஷ் குமார், பாபுவின் கை விரலை கடித்து வைத்துள்ளார்.
இதனையடுத்து அந்த குடிகார வழக்கறிஞரை பிடித்து சிறையில் அடைத்தனர். காயம் அடைந்த காவலர் பாபுவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
English Summary
CHENNAI KODUNGAIYUR POLICE ATTACK