#சென்னை | காதல், கசமுசா, நெருக்கமான புகைப்படம் - போக்ஸோ வழக்கில் சிக்கிய டியூஷன் டீச்சர்! உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன்! - Seithipunal
Seithipunal


சென்னை அருகே பள்ளி ஆசிரியை காதலித்து ஏமாற்றியதால், பதினோராம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. 

அம்பத்தூர் அடுத்த கள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன், 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு, கல்லூரியில் சேர்வதற்காக காத்திருந்த நிலையில், கடந்த 30 ஆம் தேதி இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவனின் மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், மாணவனின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்த போலீசார், அதில் சிறுவனும் பள்ளி ஆசிரியை ஷர்மிளாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அதில் அதிகம் இருந்துள்ளது.

இதனை அடுத்து பள்ளி ஆசிரியை ஷர்மிலாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மாணவன் ஆசிரியை ஷர்மிளாவிடம் டியூஷன் படிக்கும் போது, பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாக தெரிகிறது.

இதற்கிடையே ஷர்மிளாவுக்கு அவர் பெற்றோர்கள் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து, நிச்சயதார்த்தம் செய்ததால், மனவிரக்தி அடைந்த மாணவன் தூக்கிவிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணைகள் தெரிய வந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Lady Teacher arrest pocso case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->