திமுக ஆட்சியில் நடந்த சாதனைகள் - வரிசைகட்டி பேசிய முதலமைச்சர்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:- "அனைத்து மக்களையும் ஒருதாய் மக்களாகக் கருதி அன்பு செலுத்த வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சி. சமத்துவ விழாவாக நடைபெறும் இதுபோன்ற அனைத்து விழாக்களிலும் தவறாமல் கலந்து கொள்வதை என்னுடைய கடமையாக நினைக்கிறன். 

தமிழகத்தில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம், கொரோனா காலத்தில் கல்வியை விட்டுச்சென்ற இரண்டு லட்சம் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்தது, சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு நடைபாதை அமைத்து பல சாதனைகளை படைத்துள்ளோம்.

இது போன்ற சாதனைகள் தான் தி.மு.க. அரசின் அடையாளம். தமிழ்நாடு அரசு சிறுபான்மை மக்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ளது. அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான உதவித்தொகை விவகாரத்தில் ஒன்றிய அரசு நிறைவேற்றாவிட்டால், தமிழ்நாடு அரசு முடிந்தளவிற்கு நடவடிக்கை மேற்கொள்ளும்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai loyola college Christmas party mk stalin speach


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->