இங்கெல்லாம் சென்று வர இனி சிரமப்பட வேண்டாம்.! மெட்ரோ இரயில்நிர்வாகம்.!!
இங்கெல்லாம் சென்று வர இனி சிரமப்பட வேண்டாம்.! மெட்ரோ இரயில்நிர்வாகம்.!!
சென்னை மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்கும்., வேலைக்கு செல்லும் நபர்களின் பயண நேரத்தை குறைத்து அவர்களை விரைவு பயணத்திற்கு தயாராக்குவதற்கு உருவாக்கப்பட்ட திட்டம் மெட்ரோ இரயில் திட்டம்.
மெட்ரோ இரயில்வழி சேவையை மக்கள் அனைவரும் அதிகளவில் உபயோகம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட மெட்ரோ இரயிலில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு வகையான திட்டங்களை மெட்ரோ இரயில் நிர்வாக அறிவித்து வருகிறது.
அந்த வகையில்., மெட்ரோ இரயில் அறிமுகம் செய்யப்பட்ட சில நாட்களுக்கு தனது இலவச பயணம்., இலவச வைபை., பீக் அவர்ஸ் எனப்படும் பயணிகள் நெரிசல் மிகுந்த நேரத்தில் அதிகளவிலான இரயில்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களில் இருந்து அருகில் உள்ள நகருக்கு செல்வதற்கு மெட்ரோ வாகனங்கள் என்று பல்வேறு விதமான அம்சங்களை வழங்கி வருகிறது.
அந்த வகையில் தற்போது வெளியான அறிவிப்பில் வாரத்தின் இறுதி நாட்களில் மக்கள் அனைவரும் மால்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் மெட்ரோ நிலையங்களில் இருந்து மால்களுக்கு பயணிகள் எளிதில் செல்லும் வகையில் சிறப்பு மகிழுந்து வசதியை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
வாரத்தின் இறுதி நாட்களில் மட்டும் தேனாம்பேட்டை மற்றும் ஆலந்தூர் இரயில் நிலையங்களில் இருந்து மகிழுந்து மூலமாக ஸ்பென்சர் பிளாசா., இராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவெனுன்யூ மால் மற்றும் வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மால் ஆகிய பகுதிகளுக்கு மகிழுந்து இயக்கப்பட உள்ளது.
இந்த சிறப்பு மகிழுந்துகளில் ஆலந்தூர் இரயில் நிலையத்தில் இருந்து போரூரில் உள்ள சரவணா ஸ்டோருக்கு செல்வதற்கு ரூ.15 முதல் ரூ.20 கட்டமாக வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
English Summary
CHENNAI METRO RAILWAY DEPT. ANNOUNCEMENT