சில்லற இல்லப்பா!! புகார் வந்தாலே நடவடிக்கை பாயும்!! மாநகர் நடத்துனர்களுக்கு ஷாக்!! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகர் அரசு பேருந்துகளில் பயணிகள் பேருந்தில் ஏறும் போது பயணச்சீட்டுக்கு சரியான பணத்துடன் பயணிக்க வேண்டும் என நடத்துனர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்த நிலையில் பயணிகளுக்கு உரிய பயணச் சீட்டு வழங்க அவர்கள் கொடுக்கும் பணம் மற்றும் நாணயங்களை பெற்றுக்கொண்டு மீதி தொகையை வழங்க வேண்டும் என நடத்துனர்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் பணிமனைகளில் பணியின்போது நடத்துனர்களுக்கு வழங்கப்படும் முன்பணம் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும்போது முறையாக பயன்படுத்திட வேண்டும் எனவும், பயணிகளிடத்தில் சில்லறை தொடர்பான விவாதங்களை தவிர்த்து கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், இது தொடர்பாக புகார்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட நடத்துனர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Mtc order donot force passenger buy ticket correct fare


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->