மீண்டும் பரவும் கொரோனா.. ஸ்டிக்கர் ஒட்ட துவங்கிய அரசு.! - Seithipunal
Seithipunal


கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில்  ஸ்டிக்கர் ஒட்டும் பணியினை சென்னை மாநகராட்சி தொடங்கி இருக்கிறது.

உலகம் முழுவதும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா பாதிப்பினால் தப்பித்தது. 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில்  கோவிட்-19 தொற்றால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கானோர் இந்த பெருந்தொற்றிற்கு உயிரிழந்தனர். இந்தியாவிலும் இதன் பாதிப்பு மிகக் கடுமையாக இருந்தது.

2022 ஆம் ஆண்டிற்கு பிறகு தான்  இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது. மேலும் இந்த பெருந்தொட்டிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில்  மாநகராட்சி நிர்வாகம் இறங்கியுள்ளது.

கடந்த சில தினங்களாக இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4000 மாக எட்டியுள்ளது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 200க்கும் அதிகமாக உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளை மீண்டும் தொடங்கியிருக்கிறது சென்னை மாநகராட்சி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai municipality started to posting the sticker on the houses of people who got covid 19


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->