சென்னை | 25 வயது பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்த 65 வயது அலாவுதீன் தாத்தா! - Seithipunal
Seithipunal


தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி 25 வயது பெண்ணை தொடர்ந்து துன்புறுத்தி வந்த 65 வயது முதியவரை பெண்கள் கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னையில் உள்ள மணலி ராதாகிருஷ்ணன் பகுதியைச் சேர்ந்தவர் அலாவுதீன் (வயது 65). முதியவரான இவர் அதே பகுதியில் செருப்பு கடை ஒன்றை நடத்தி வருகிறார். 

இவரது கடைக்கு எதிரில் மளிகை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மளிகை கடையில் பணிபுரிந்து வந்த 25 பெண் ஒருவருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். 

தொடர்ந்து பேசி வந்த நிலையில், திடீரென முதியவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்தப் பெண்ணை துன்புறுத்த ஆரம்பித்துள்ளார்.

இதனை அறிந்த பெண்ணின் தாய், முதியவரிடம் இது குறித்து தட்டி கேட்டபோது பெண்ணின் தாயை அலாவுதீன் தாக்க முயன்றுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 

விசாரணைக்கு பிறகு போலீசார் முதியோரை, பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai old men loved young girl


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->