ஒரே டிக்கெட் முறை எப்போது? வெளியான முக்கிய தகவல்.!! சென்னை மக்கள் நிம்மதி
Chennai one ticket scheme come to effect on June 2nd week
சென்னையில் மாநகர் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என பொதுமக்கள் மாறி மாறி பயணம் மேற்கொள்வதால் அதற்காக தனித்தனியே டிக்கெட் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில் சென்னையில் ஒரு டிக்கெட் முறையை அமல்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது.
அதன்படி சென்னையில் மாநகர் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இந்த திட்டம் ஜூன் இரண்டாவது வாரத்தில் அமலுக்கு வர இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குடும்பம் மூலம் பொது போக்குவரத்து முறையில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறையில் பிரத்தியேக கார்டு வழங்கி ரீசார்ஜ் செய்து பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தனியாக செயலி உயிர்வாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குடும்பம் டெண்டர் கோரி இருந்தது.
English Summary
Chennai one ticket scheme come to effect on June 2nd week