சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்! உச்சகட்ட பரபரப்பில் வட தமிழகம்! நெருங்கிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! - Seithipunal
Seithipunal


வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகம் நோக்கி தற்போது வருவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை (14ம் தேதி) முதல் வரும் 16ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மேலும், தென்மேற்கு பரும பருவமழை இந்தியாவை விட்டு இன்னும் இரண்டு நாட்களில் முழுமையாக விலகும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்னும் இரண்டு தினங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு அதிதீவிர (20 செ.மீ-க்கு மேல்) மழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுத்து வருவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், "பொதுமக்களுக்கு பிரத்யேக உதவி எண் 1913 வழங்கப்பட்டுள்ளது; கட்டுப்பாட்டு  அறையில் 150 பேர் 4 ஷிப்டக்களாக 24 மணி நேரமும் பொதுமக்களின் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்து வருகின்றனர். ‘தமிழ்நாடு அலர்ட்’என்ற புதிய செயலியை அரசு உருவாக்கியுள்ளது; அதனை பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் மழை குறித்த அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம் 

சென்னை மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன; அந்தந்த தொகுதி எம்.எல்.ஏக்கள் நிவாரண முகாம்களுக்கு தேவையான உணவு தண்ணீர் போன்ற பொருட்களை உறுதி செய்வார்கள்" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai over Hevy rain alert


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->