ஒரே ஒரு க்ளிக்.. ரூ.2.5 லட்சம் அபேஸ்.. வட மாநில கும்பல் விரிக்கும் வலை.!! உஷார்
Chennai police arrested online job fraud gang
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் அருண் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளிததுள்ளார் . அந்த புகாரில் ஆன்லைன் வேலை தருவதாக கூறி தனது வங்கி கணக்கில் 2.5 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அருண் செலுத்திய வங்கிக் கணக்கு எண்ணை வைத்து அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த நல்லம்பட்டி தேஜா ( 22), அண்ணாநகர் சாந்தோம் காலனியைச் சேர்ந்த விஜய் (24), ஹைதராபாத்தைச் சேர்ந்த சரஸ்வதி (23) ஆகியோர்தான் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தை அடுத்து மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கமிஷனுக்காக போலி வங்கிக் கணக்கு தொடங்கி அதன் மூலம் பணத்தைப் பெற்று, மோசடியில் ஈடுபட்ட வேறொரு கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது .
இந்த மோசடியில் வட மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று மூளையாகச் செயல்பட்டு இவர்களது வங்கி கணக்கில் பணத்தைப் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து 15 போலி ஏடிஎம் கார்டுகள், 3 செல்போன்கள் மற்றும் 15 வங்கி புத்தகங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வடமாநில கும்பலை காவல்துறை தேடி வருகிறது.
English Summary
Chennai police arrested online job fraud gang