சென்னையில் வாட்ஸப்பிலும் புகார் அளிக்க எளிய முறை.. பிரத்தியேக அலைபேசி எண்கள் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை கட்டுக்குள் வைக்கும் பொருட்டு காவல் துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்டமாக நகரின் வெவ்வேறு பகுதியில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக நகரில் கண்காணிப்பு பணிகளும் அதிகரிக்கப்பட்டு வந்த நிலையில், எளிய முறையில் புகார் அளிக்கும் முறையும் விரைவில் கொண்டு வருவதாக சென்னை காவல் துறையினர் சார்பாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், புகார் அளிப்பதற்கென பிரத்தியேக வாட்சப் அலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, புனித தோமையார் மலை - 70101 10833 என்ற எண்ணிலும், அடையாறு - 87544 01111 என்ற எண்ணிலும், தி.நகர் சரகத்திற்கு - 90030 84100 என்ற எண்ணிலும் புகார் அளிக்கலாம். 

மயிலாப்பூர் சரகத்திற்கு 63811 00100 என்ற எண்ணிலும், பூக்கடை சரகத்திற்கு - 94980 08577 என்ற எண்ணிலும், வண்ணாரப்பேட்டை சரகத்திற்கு - 94981 33110 என்ற எண்ணிலும், மாதாவரம் சரகத்திற்கு - 94981 81385 என்ற எண் மற்றும் அம்பத்தூர் சரகத்துக்கு  91764 27100 என்ற எண்ணிலும் புகார் அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Police WhatsApp Complaint Contact Number


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->