சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை! உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி!
Chennai Rains Udhayanithi stalin
சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ரிப்பன் மாளிகையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கட்டளை மையத்தில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் தெரிவிக்கையில், "ஒருங்கிணைந்த கட்டளை மையத்தில் 150 பேர் கொண்ட குழு, 4 ஷிப்ட்களாக செயல்படுகிறது
பொதுமக்களின் உயிரும், உடமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே முதன்மை நோக்கம். 13,000 தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மழை பாதிப்பு குறித்து 1913 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம்.
113 மோட்டார் பம்புகள் தாழ்வான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து வார்டுகளிலும் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 83 கழிவுநீர் உறிஞ்சும் லாரிகள் உள்ளன. பணிகளை மேற்பார்வையிட பிற மாவட்டங்களில் இருந்தும் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
TamilNadu Alert என்ற செயலி மூலம் முன்னெச்சரிக்கைகளை உடனுக்குடன் பொதுமக்கள் பெறலாம். சமூகவலைத்தளங்கள் மூலமாகவும் மக்களுக்கு மழை குறித்தான அறிவிப்புகளை தெரிவிக்க உள்ளோம்" என்று தெரிவித்தார்.
English Summary
Chennai Rains Udhayanithi stalin