சென்னை: நகைக் கடையில் தங்கம், வைர நகை திருட்டு! வேலைக்கு சேர்ந்த 2 மாதத்தில் சேதாரம் செய்த பெண்! - Seithipunal
Seithipunal


சென்னை, தியாகராயர் நகரில் உள்ள ஒரு நகைக் கடையில், தீபாவளி நேரத்தில் பணியில் சேர்ந்த பெண், 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை திருடி தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து நகைக்கடையின் உரிமையாளர் சுரேஷ் ஜெயின், மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

கடந்த நவம்பர் 3ஆம் தேதி முதல் அந்தப் பெண் பணிக்கு வராததால் சந்தேகம் கொண்டு, நகைகளை சோதனை செய்தபோது சில நகைகள் போலியாக மாற்றி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை போலி நகைகளால் மாற்றி விட்டு தப்பியிருக்கிறார். 

மேலும், கடையில் பணிக்கு சேர்ந்தபோது அப்பெண் அளித்த ஆவணங்களும் போலியானவை என்பதும் விசாரணையில் தெரியவந்து உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai T Nagar Jewells shop robbery case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->