#சென்னை || கொரோனா எதிரொலி - செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைப்பதாக அறிவித்த பல்கலைக்கழகம்.! - Seithipunal
Seithipunal


செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைப்பதாக சென்னை பல்கலைக்கழகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு வருகின்ற ஜனவரி 21ஆம் தேதி முதல் சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கு பருவ தேர்வுகள் (செமஸ்டர்) நடைபெற அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதற்கிடையே, தமிழக அரசு கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பித்தது. 

இதன் காரணமாக தமிழகத்தில் தற்போது பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதே சமயத்தில் 10 ,11 ,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துணை படிப்புகளுக்கு கல்லூரிகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், சென்னை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு வருகின்ற ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இருபத்தி ஒன்றாம் தேதி முதல் பருவ தேர்வுகள் நடைபெற அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 

இந்த நிலையில், நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பருவத் தேர்வுகளை ஒத்திவைப்பதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும் தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என்று, சென்னை பல்கலைக்கழகம் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai university semester exam postponed


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->