சென்னை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் வெளியீடு - எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


இன்று சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி நிறுவனத்தின் பருவத் தேர்வு முடிவுகள் வெளியாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பிற்கான 2023 ஜூன் மாத பருவத் தேர்வு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை நடைபெற்றது. 

இந்த தேர்வை, தொலைதூர கல்வி நிறுவனத்தில் பயிலும் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுதி இருந்தனர். இந்த நிலையில், இதற்கான தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளதாவது:- "தேர்வு முடிவுகள், மாலை 6 மணிக்கு www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை அறியலாம் என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai university semester exam result


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->