சென்னை: மொத்தம் 1,878 விநாயகர் சிலைகள்! ஒரே நாளில் கடலில் அமைதியான முறையில் கரைப்பு! - Seithipunal
Seithipunal


கடந்த 07.09.2024 அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள், காவல்துறை அனுமதி பெற்று, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொது இடங்களில் 1,524 விநாயகர் சிலைகளை நிறுவி உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து வழிபாடு செய்து வந்தனர். 

வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று (15.09.2024) காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் வாகனங்களில் ஏற்றி ஊர்வலமாக எடுத்துச் சென்று 1.பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் 2.நீலாங்கரை, பல்கலைநகர், 3.காசிமேடு மீன்பிடி துறைமுகம், 4.திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 இடங்களில் கடலில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அதன்படி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில் விநாயகர் சிலை ஊர்வல பாதைகள் மற்றும் மேற்படி சிலை கரைக்கும் இடங்களில், சட்டம் மற்றும் ஒழுங்கு, போக்குவரத்து, சிறப்புப்பிரிவு, ஆயுதப்படை, ஆயுதப்படையின் அதிவிரைவுப் படை, என 16,500 போலீசார் மற்றும் 2,000 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்,

சென்னை பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வழிபாடு செய்த 1,524 விநாயகர் சிலைகளில் 1,277 விநாயகர் சிலைகளும், தாம்பரம் காவல் ஆணையரகத்திற்குட்பட்ட இடங்களில் வழிபாடு செய்த 591 விநாயகர் சிலைகளில் 405 விநாயகர் சிலைகளும், ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட இடங்களில் வழிபாடு செய்த 366 விநாயகர் சிலைகளில் 196 விநாயகர் சிலைகள் உட்பட மொத்தம் 1,878 விநாயகர் சிலைகள் இன்று (15.09.2024) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, 1.பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், 2.நீலாங்கரை, பல்கலைநகர் 3.காசிமேடு, மீன்பிடி துறைமுகம், 4.திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய இடங்களில் கடலில் அமைதியான முறையில் கரைக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Vinayagar Statue Dispossed


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->