ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு முழு அனுமதி - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


ஆர்எஸ்எஸ் அணிவகுப்பிற்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பொருத்தவரை பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்சினைகள், பிஎப்ஐ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது, கோவை கார் குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களை மேற்கோள் காட்டி ஆர்எஸ்எஸ் அணி வகுப்பை சுற்றுச்சுவர் இருக்கக்கூடிய மைதானங்களில் நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் சார்பில் 45 மேல்முறையீட்டு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணையின் போது ஆர்எஸ்எஸ் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஏற்கனவே ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் மாற்றி அமைத்தது தவறு எனவும், சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் அணிவகுப்பு நடத்த உத்தரவிட்டது தவறு எனவும் எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது.

மேலும் பிஎப்ஐ அமைப்புக்கு தடை விதித்ததை காரணம் காட்டி எந்த ஒரு ஆதாரங்களும் இல்லாமல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் 500க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என ஆர்எஸ்எஸ் தரப்பு வாதங்களை முன் வைத்தது.

இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் சுற்றுச்சூழுடன் கூடிய மைதானத்தில் அனுமதி வழங்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து ஆர்எஸ்எஸ் தரப்பு அணிவகுப்பு நடத்தப்பட மாட்டாது என அறிவித்த பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. 

மாநிலத்தின் சட்ட ஒழுங்கு பிரச்சனையை பாதுகாப்பது காவல்துறையினரின் கடமை தான் அதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பதும் அடங்கும். தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட போராட்டங்களுக்கு தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஒரு அணி வகுப்புக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. 

ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றது எதிரொலியாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பில் சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கிய உத்தரவை ரத்து செய்வதாகவும், ஆர்எஸ்எஸ் அணி வகுப்பிற்கு அனுமதி கேட்டு மீண்டும் காவல்துறையினரிடம் விண்ணப்பிக்கலாம் எனவும், அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் காவல்துறையினர் பரிசீலனை செய்து அனுமதி வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் அந்த உத்தரவில் கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் போன்றவற்றை அரசு பாதுகாக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய தெளிவாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ChennaiHC granted permission for RSS march


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->