மதுபானம் விற்பனையில் விதிகள் பின்பற்றப்படுகிறதா.? அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


மதுபான உரிமம் தொடர்பான நிபந்தனைகளை கேளிக்கை விடுதிகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் பின்பற்றப்படுகின்றனவா.? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சுரேஷ் பாபு என்பவர் தமிழ்நாடு அரசு அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பல கிளப்புகள், ஹோட்டல்களில் மது விற்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசு நிர்ணயத்த விதிகளை கேளிக்கை விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் பின்பற்றப்படுகின்றனவா.? என்பதை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இது தொடர்பான முழு அறிக்கையையும் தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீவுத்துறை 2 வாரங்களுக்குள் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் அரசு மதுபான பாரில் கள்ளச் சந்தையில் மதுபானம் வாங்கி குடித்த இருவர் உயிரிழந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ChennaiHC ordered tngovt to responds rules followed in liquor sales


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->