முரசொலி பஞ்சமி நில விவகாரம்.."ஜூன் 13க்குள் அறிக்கை தாக்கல் செய்யுங்க".. உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி..!! - Seithipunal
Seithipunal


திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் முரசொலியின் அலுவலகம் கோடம்பாக்கத்தில் அலுவலகம் அமைந்திருக்கும் நிலம் பஞ்சமி நிலம் என பாஜக குற்றம் சாட்டி இருந்தது.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக பாஜக சார்பில் முரசொலி அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில் முரசொலி அலுவலகம் இடம் தொடர்பான வழக்கிலிருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி கடந்த ஏப்ரல் 3ம் தேதி விலகினார். வேறு நீதிபதிக்கு முன்பாக பட்டியலிட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அவர் பரிந்துரை செய்திருந்தார். அதன்படி இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்பு பட்டியலிடப்பட்டது.

இந்த வழக்கானது நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது "திமுக தொடர்புடைய முரசொலி அறக்கட்டளையைக் குற்றம் சாட்டி 2019 ஆம் ஆண்டு பாஜக நிர்வாகி சீனிவாசன் அளித்த புகாரின் மீது ஜூன் 13 ஆம் தேதிக்குள் முரசொலி அறக்கட்டளை அமைந்துள்ள 12 கிரவுண்ட் நிலம் தொடர்பான முழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்" என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு வரும் ஜூன் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முரசொலி அறக்கட்டளை பஞ்சமி நில விவகாரம் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ChennaiHC orders to file report regarding Murasoli Panchami land


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->