சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வு வழக்கு., 7 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் விசாரணை.! - Seithipunal
Seithipunal


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தேர்வு தேர்வின்போது ஆள்மாறாட்டம் செய்த வழக்கில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்வின் போது, பல்வேறு துறைகளில் 147 பேர் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியுள்ளனர்.

இதுகுறித்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், 147 பேர் மீது சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் பலர் அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள் ஆக பணிபுரிந்தவர்கள்.

இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் 139 பேர் நீதிபதி முன்பு ஆஜர் ஆகினர்.

2015ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் ஏழு ஆண்டுகள் கழித்து தற்போது இந்த வழக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chidambaram Annamalai University Exam Case after 7 years


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->