மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த தனியார் தொலைக்காட்சி ஊழியர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!
Chief Minister announces relief to private journalist who fell into rainwater ditch
சென்னையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த தனியார் தொலைக்காட்சி ஊழியர் உயிரிழந்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை எம்ஜிஆர் நகரில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிக்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதில் சென்னை பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றும் முத்துக்கிருஷ்ணன் என்பவர் நேற்று இரவு பணி முடிந்து வந்தபோது எதிர்பாராத விதமாக சென்னை எம்ஜிஆர் நகரில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.
இதனால் பலத்த காயமடைந்த முத்துக்கிருஷ்ணனை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரடியாக இராயப்பேட்டை மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை அளிக்குமாறு தெரிவித்தார்.
தீவிர சிகிச்சை பெற்று வந்த முத்துகிருஷ்ணன் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலியான பத்திரிகையாளர் முத்துக்கிருஷ்ணன் குடும்பத்தினருக்கும், பத்திரிக்கையாளர் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
English Summary
Chief Minister announces relief to private journalist who fell into rainwater ditch