உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி - முதல்வர் ஸ்டாலின்.!
chief minister mk stalin tweet about world mother tongue day
ஒவ்வொரு ஆண்டும் பிரவரி மாதம் 21 ஆம் தேதி சர்வதேச தாய் மொழி தினம் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இன்று சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி. இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்.
அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி. போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி! உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி! என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
chief minister mk stalin tweet about world mother tongue day