மீண்டும் மருத்துவமனைக்கு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.!
chief minister mk stalin visit her mother in appollo hospital
தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் வயது மூப்பின் காரணமாக கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு தயாளு அம்மாளுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே, நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விமானம் மூலம் சென்னைக்கு திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு நேரடியாக சென்றார்.

அங்கு தாயார் தயாளு அம்மாளைப் பார்த்துவிட்டு, அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் சென்றிருந்தார். இதேபோல், தாயார் தயாளு அம்மாளின் நலம் குறித்து விசாரிக்க மு.க. அழகிரியும் மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தார்.
இந்த நிலையில், தாயார் தயாளு அம்மாளின் நலம் குறித்து விசாரிக்க இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வருகை தந்துள்ளார். அங்கு தாயாரின் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்து வருகிறார்.
English Summary
chief minister mk stalin visit her mother in appollo hospital