வெற்றி துரைசாமி மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்.!
chief minister stalin condoles to vetri duraisami death
சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் விபத்தில் சிக்கி மாயமானார். அவரது உடல் பல நாட்களாக நடைபெற்ற மீட்புப் பணிக்கு பிறகு நேற்று கண்டெடுக்கப்பட்டது.
அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் சிக்கி வெற்றி துரைசாமி உயிரிழந்து, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது குறித்த செய்தியை பார்த்து மிகுந்த வேதனையும் அடைந்தேன்.
மகனை இழந்து தவிக்கும் சைதை துரைசாமிக்கு இதயபூர்வமான ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
chief minister stalin condoles to vetri duraisami death