''ஆகாயத்தில் ஆச்சரியம்''... டென்னிஸ் ஜாம்பவானுடன் முதல்வர் ஸ்டாலின்! வைரலாகும் புகைப்படம்! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் டென்னிஸ் ஜாம்பவான் நோவாக் ஜோகோவிச் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு முறை பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு கடந்த சனிக்கிழமை இரவு புறப்பட்டார். அந்நாட்டில் முதலீடுகளை ஈா்க்கும் விதமாக தமிழ்நாடு அரசின் சார்பில் முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கிடையே முதலமைச்சர் ஸ்டாலின் பயணித்த அதே விமானத்தில் டென்னிஸ் வீரர் ஜோகோவிச் பயணித்துள்ளார். அப்போது இருவரும் சந்தித்துக் கொண்ட நிலையில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

இந்த புகைப்படத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் 'ஆகாயத்தில் ஆச்சரியம்' என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். முதலமைச்சர் பகிர்ந்த இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister Stalin with tennis player Viral photo


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->