குழந்தை திருமணம்,வளரிளம் பருவ சிறுமிகள் கர்ப்பம் போன்றவற்றை தடுக்க வேண்டும்..மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தல்!
Child marriage adolescent girls pregnancy should be prevented. District Collector M Prathap
திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் நடைபெற்ற மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு குழு கூட்டத்தில் குழந்தை திருமணம் தடுத்தல், வளரிளம் பருவ சிறுமிகள் கர்ப்பம் தரித்தல் போன்றவற்றை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தினார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை கீழ் இயங்கும் திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பாக மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு குழு கூட்டம், மாவட்ட அளவிலான பணிக்குழு மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு, குழந்தைகள் நலக்குழு கூராய்வு கூட்டம், Multi Disciplinary Task Force கூட்டம். சைல்டு லைன் கூராய்வு கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டத்தை வலுப்படுத்துவதை முக்கிய நோக்கமாகவும், போதை பழக்கத்திலிருந்து குழந்தைகளை மீட்க காவல் துறை மூலம் தொடர் கண்காணிப்பில் மேற்கொள்ள வேண்டும். குழந்தை திருமணம் தடுத்தல், வளரிளம் பருவ சிறுமிகள் கர்ப்பம் தரித்தல் போன்றவற்றை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல்.பதிவு பெற்ற குழந்தைகள் இல்லங்களை தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.. மேலும், இல்லங்களில் பயிலும் குழந்தைகளுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலருடன் இணைந்து விளையாட்டு போட்டிகள் நடத்திடவும், தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் முதல் 10 குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களை சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தினார்.
திருமண மண்டபங்களில் 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு திருமணம் செய்வது உறுதி செய்யப்பட்டால் மண்டபத்தின் உரிம சான்றிதழ் ரத்து செய்து, சீல் வைக்கவும், செங்கல் சூளைகளில் காவல் துறையினர்களுடன்; தொடர் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வராணி, உதவி இயக்குநர் பேரூராட்சிகள் ஜெயகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் வாசுகி;, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் லலிதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு நிஷாந்தினி, காவல் துறை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, உதவி இயக்குநர்- ஊராட்சிகள், கல்வித்துறை அலுவலர்கள், மருத்துவ துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், குழந்தைகள் நலக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர், நன்னடத்தை அலுவலர், உதவி இயக்குநர் - ஆய்வாளர் - இரயில்வே பாதுகாப்பு படை மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
English Summary
Child marriage adolescent girls pregnancy should be prevented. District Collector M Prathap