தேங்கிய மழைநீர்.! தவறிய சிறுமி.! - Seithipunal
Seithipunal


சென்னையில் நேற்று மழை பெய்த மழையால், பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்தில் அதிக சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கும் நிலை ஏற்பட்டது. அதிலும் குறிப்பாக காசி தியேட்டரில் இருந்து அசோக் நகர் மெட்ரோ வரை 500 மீட்டர் நீளம் உள்ள மழைநீர் வடிகால் முழுவதும் சேதமடைந்து மழைநீர் தேங்கி நின்றுள்ளது.

இதுகுறித்து கே.கே.நகர் பகுதி மக்கள் தெரிவித்ததாவது, "அந்த வடிகால் பள்ளத்தில் மழைநீர் தேங்கி இருந்ததால், 5 வயது சிறுமி ஒருவர் தவறி விழுந்ததாகவும், அதை பார்த்து அருகிலிருந்தவர்கள் காப்பாற்றியதாகவும்" தெரிவித்துள்ளனர். மேலும், உடனடியாக தமிழக அரசு அந்த மழைநீர் வடிகாலை சீரமைத்து தரவேண்டும் என்றும் அப்பகுதி  கோரிக்கை வைத்துள்ளனர்

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

child step down for rain water drianege


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->