#MeToo || தனிப்பட்ட பிரச்சனையா.? உங்க மருமகன் மன்னிப்பு கேட்டாரே..!! டி.கே.எஸ் இளங்கோவன் சாடிய சின்மயி..!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் நடைபெற்று வரும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் குறித்து திமுக தரப்பிலிருந்து கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாடலாசிரியர் வைரமுத்து மீது தற்போது வரை 19 பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏன் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. மேலும் பாடகி சின்மயி அவர் மீது புகார் அளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய திமுகவைச் சேர்ந்த டி.கே.எஸ் இளங்கோவன் வைரமுத்து மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு இருவருக்கும் உள்ள தனிப்பட்ட விவகாரம் என பேசி இருந்தார். இதற்கு பாடகி சின்மயி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "திமுகவின் மதிப்பிற்குரிய டி.கே.எஸ்.இளங்கோவன் என்னுடைய பாலியல் துன்புறுத்தல் விவகாரம் ‘இரண்டு பேருக்கு இடையேயான தனிப்பட்ட பிரச்சனை’ என்று குறிப்பிட்டதை நான் அறிய நேர்ந்தது. டி.கே.எஸ் இளங்கோவனின் மருமகனும், நடிகருமான ஜான் விஜய் கடந்த 2018ஆம் ஆண்டு மீடூ இயக்கத்தில் குறைந்தது 3 பெண்களால் குற்றம் சாட்டப்பட்டார். அதற்கு அவர் மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவருக்கும் எதுவும் பாதிப்பில்லை. அவர் அனைத்து மொழிகளிலும் நூற்றுக்கணக்கான படைப்புகளைப் பெற்றுள்ளார்" என டி.கே.எஸ் இளங்கோவனை சாடியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chinmayi reacts to TKS elangovan comment on Vairamuthu sexual harassment


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->