பாலியல் குற்றவாளியை கொண்டாடும் முதல்வர் ஸ்டாலின்! வெட்கக்கேடு (அவமானம்) - பாடகி சின்மயி விளாசல்!
Chinmayi Sripaada Condemn MK Stalin Wish Vairamuthu
திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு, பெசன்ட் நகரிலுள்ள அவரின் வீட்டுக்கே சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில், பாடகி சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "பல பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஒரு மனிதனின் பிறந்தநாளுக்கு, நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
பல விருதுகளைப் பெற்ற பாடகர் மற்றும் குரல் கலைஞரான நான், 2018 முதல் தமிழ்த் திரைப்படத் துறையில் ஓரங்கட்டப்பட்டு உள்ளேன். காரணம் MeToo இயக்கத்தில் வைரமுத்து மீது நான் கூறிய புகார் தான்.
5 வர்ஷம் ஆகிடுச்சு. சட்டப்பூர்வ நடைமுறையே பெரிய தண்டனை தான். ஒருவேளை அவர்கள் சொல்வது, ‘நீ எப்படி நியாயம் கேட்கத் துணிகிறாய்?
எந்தப் பெண்ணின் மீதும் கை வைக்கலாம் என்று முடிவில் இருந்த வைரமுத்து, பல அரசியல்வாதிகளுடன் குறிப்பாக திமுகவுடன் தனது நெருக்கத்தால், என்னை அமைதியாக இருக்குமாறு அச்சுறுத்தினார்.
வைரமுத்துவுக்கு பல பத்ம விருதுகள் மற்றும் சாகித்ய நாடக அகாடமி விருது மற்றும் பல தேசிய விருதுகள் கிடைத்துள்ளது என்றால், இது தான் அவரின் பலம், அதனாலேயே பல பெண்கள் வாய் திறக்கவில்லை.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பெண்களின் பாதுகாப்பிற்காக பேசுவது அவமானம். வைரமுத்துவின் விவகாரத்தில் மட்டும் இவர்கள் அமைதியாகிவிடுவார்கள்.
இந்த தமிழ் மண்ணில் ஒவ்வொரு ஆண்டும் பாலியல் துஷ்பிரயோகம் செய்த வைரமுத்துவின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்வார்கள். இதுதான் பெண்ணியம். பாலியல் குற்றவாளிகளைக் கொண்டாடுகிறார்கள், அவருக்கு எதிராக குரல் கொடுக்கும் பெண்களைத் துன்புறுத்துகிறார்கள்.
என்னை பார்த்தும் சிலர், வயிறு எரியுதா என்று சொல்வது, தமிழ் மண்ணின் பலாத்கார மன்னிப்புக் கலாச்சாரம். பகுத்தறிவு இல்லாத மனிதர்கள்.
பிரிஜ் பூஷன், வைரமுத்து போன்றவர்கள் எப்போதும் தப்பித்து விடுவார்கள், ஏனென்றால் அரசியல்வாதிகள் இந்த மனிதர்களைப் பாதுகாப்பார்கள்" என்று பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.
English Summary
Chinmayi Sripaada Condemn MK Stalin Wish Vairamuthu