சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த..கிறிஸ்தவ மத போதகர்..போக்ஸோவில் கைது.! - Seithipunal
Seithipunal


உதகையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கிறிஸ்தவ மத போதகர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.

உதகை அருகே பிங்கர்போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் சூரி ஸ்டீபன். 53 வயதான இவர் கிறிஸ்துவ தேவாலயத்தில் மதபோதகராக பணியாற்றிவருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று தனது வீட்டின் அருகே உள்ள உறவினரின் வீட்டிற்கு சென்று அங்கு தனியாக விளையாடிக்கொண்டிருந்த 13 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

அப்போது சிறுமியின் கூச்சல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை காப்பாற்றி, மத போதகருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் உதகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

அதனையடுத்து மதபோதகர் சூரி ஸ்டீபன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த  காவல்துறையினர் அவரை உதகையில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து இந்த மத போதகரை பிப்ரவரி 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Christian Paster sexual harrasment for 13 year old


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->