தமிழகம் || 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! ஜெபகூட்ட கிருஸ்துவ மதபோதகர் சாமுவேல் அதிரடியாக கைது.! - Seithipunal
Seithipunal


திருப்பூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிறிஸ்தவ மதபோதகர், போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர்மாவட்டம்: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கிறிஸ்தவ மத போதகர், போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், வீரபாண்டி சேர்ந்தவர் கிறிஸ்தவ மதபோதகர் சாமுவேல். இவர் ஜெப கூட்டத்துக்கு வந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, தனது பெற்றோரிடம் கிறிஸ்தவ மதபோதகர் பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் திருப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், உடனடியாக கிறிஸ்தவ மதபோதகர் சாமுவேல் மீது போக்ஸோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Christian pastor Samuel arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->