கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: சாகசத்தில் ஈடுபட்டால் கைது! போலீசார் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையை எச்சரித்துள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குற்ற நடவடிக்கைகளை தடுக்க பல்வேறு குழுக்களாக அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது அல்லது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும் அவர்களது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டால் மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறையால் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்படும். 

வருகின்ற பண்டிகையை பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் கொண்டாடி மகிழ்ந்திடுமாறு மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Christmas Celebration Police alert


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->