மதுக்கடையில் கள்ளநோட்டு புழக்கம் அதிகரிப்பு! பாமர மக்களிடம் உலா! - Seithipunal
Seithipunal


மது கடைகளில் கள்ள நோட்டு கொடுத்து மதுவாகியவர் அதிர்ச்சி!

கிருஷ்ணகிரி மாவட்டம்: ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதிகளில் சிறு வியாபாரிகள், காய்கறி விற்பனையாளர்கள், கூலி தொழில், செங்கல் சூளைகளில் பணியாற்றுபவர்கள் போன்ற நபர்களுக்கிடையே 100 மற்றும் 500 ரூபாய் கள்ளநோட்டு தெரியாமல் புழக்கத்தில் வந்து விடுகிறது. 

இதனை அறியாமல், நேற்று ஊத்தங்கரை- திருவண்ணாமலை சாலையில் உள்ள அரசு மதுபான கடையில் பாமர மக்களில் ஒருவர் மதுபானம் வாங்கி கொண்டு பணம் கொடுத்துள்ளார்.

அந்த பணத்தை வாங்கிய மதுக்கடை பணியாளர், அதில் 100 ரூபாய் நோட்டு கள்ளநோட்டாக இருந்ததை பார்த்து உடனடியாக நோட்டின் மீது கள்ளநோட்டு என பேனாவில் எழுதி அவரிடமே கொடுத்துவிட்டார். 

அந்த நபர் செங்கல்சூளையில் கூலி தொழில் செய்துகொண்டு வந்த பணம் கள்ள நோட்டு என தெரிந்ததால், மிகவும் மன வருத்தத்துடன் திரும்பி சென்றார். 

இது போன்ற கள்ளநோட்டு பற்றி அறியாத பாமர மக்களிடம், குறிப்பாக ஊத்தங்கரை பகுதியில், அதிக அளவில் உலா வருவதால் கூலி தொழிலாளிகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். 

இதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுத்து கள்ளநோட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

circulation fake notes increased


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->