தமிழக அரசு புரிந்துகொள்ளா விட்டால் போராட்டம் வெடிக்கும்.! CITU மாநிலத் தலைவர் எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்க நிர்வாகிகளுடன் நடைபெற்ற 6ம் கட்ட முத்தரப்பு பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சி.ஐ.டி.யு மாநிலத் தலைவர் சௌந்தர்ராஜன் "தமிழக அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டாலும் அதற்கான நிலுவைத் தொகையை வழங்குவதில்லை. 

தமிழக அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். எங்களின் கோரிக்கை குறித்து ஆனா எல்லாம் கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தி அனுப்பப்பட்டுள்ளனர். எத்தனை முறை பேச்சு வார்த்தைக்கு போவீர்கள், போக்குவரத்து துறை இயக்குனரும் பேச்சுவார்த்தைக்கு வருவதில்லை. நிலுவைத் தொகை பிரச்சனைக்கு தீர்வு காணாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற கோபம் போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியில் இருக்கிறது.

இதனை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இந்த விவகாரம் போராட்டத்தில் கொண்டு போய் முடியும் நிலைமை தற்பொழுது இருக்கிறது என்பதை நாங்கள் ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கையாக சொல்கிறோம். எனவே போக்குவரத்து தொழிலாளர்களின் உரிமைகளுக்கு தமிழக அரசு செவி சாய்த்து உடனடியாக தீர்வு காண வேண்டும்" என தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CITU warns TNgovt transport workers protest will break out


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->