பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியது..தேர்வு அறையில் அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆய்வு! - Seithipunal
Seithipunal


ராணிபேட்டை  மாவட்டம் வாலாஜா அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெயு சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பிளஸ்-1 ,பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு முடிவடைந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது.

 காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற உள்ளது. தேர்வின் முதல் 10 நிமிடம் வினாத்தாளை வாசிப்பதற்கும், அடுத்த 5 நிமிடம் சுய விவரங்களை விடைத்தாளில் பதிவு செய்வதற்கும், 10.15 மணி முதல் 1.15 மணி வரை தேர்வு எழுதுவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.இன்று தொடங்கும் தேர்வு அடுத்த மாதம் ஏப்ரல் 15-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்த தேர்வை மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதுகிறார்கள்.இந்தநிலையில் ராணிபேட்டை  மாவட்டம் வாலாஜா அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெயு சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி. சரஸ்வதி ஆகியோர் உடனிருந்தனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Class 10 public examination has begun District Collector inspects exam hall with officials


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->