6ம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சீட்டு விளையாட்டை நீக்க வேண்டும் - ஜவாஹிருல்லா!! - Seithipunal
Seithipunal


ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சீட்டு விளையாட்டை நீக்க கோரி மனித நேயம் மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது,

தமிழக அரசின் கல்விக் கல்வித்துறை சார்பில் வெளியேறப்பட்டுள்ள ஆறாம் வகுப்பு கணக்கு பாடத்தில் மூன்றாம் பருவத்தின் தொகுதி 2 பாடப்புத்தகத்தில் இயல் இரண்டில் முழுக்கள் எனும் தலைப்பில் சீட்டு விளையாட்டு பாடம் இடம்பெற்றுள்ளது. கணிதத்தில் முழுக்கள் குறித்து உவமையுடன் நடத்த பல்வேறு வழிமுறைகள் உள்ளன.


சீட்டுக்கட்டு முறையை மாணவர்களுக்கிடையே அறிமுகப்படுத்தி இருப்பது ஏற்புடையதல்ல. ரம்மி மற்றும் சூதாட்டங்களில் சீட்டுக்கட்டு முறையும் முதலிடம் வகிக்கிறது. ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து பலர் பலியாகி உள்ளனர். இப்பாடதிட்டம் அதிமுக அரசு காலத்தில் கொண்டுவரப்பட்டு இருந்தாலும் கூட, திமுக ஆட்சியில் இதே பாடம் நீடிப்பது கொள்கைக்கு எதிரானது. எனவே மாணவர்களின் எதிர்காலத்தை நலனை கொண்டு உடனடியாக அந்த சீட்டு கட்டு பாடத்தை  நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

class 6 std book rummy Card removed from Jawahirullah


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->