#திருத்தணி : நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு.! முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கல்குவாரி குட்டை நீரில் மூழ்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் அவர்கள் நிதி உதவி அறிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

"திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியிலுள்ள உறவினர் இல்லத்திற்குச் சென்றிருந்த திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா, போளூர், பார்வதி அகரம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி.மல்லிகா, த/பெ.நரசிம்மன் (வயது 65), செல்வி. ஹேமலதா த/பெ.விநாயகம் (வயது 16) மற்றும் செல்வி. கோமதி, த/பெ.மாரிமுத்து ஆகியோர் இன்று காலை திருத்தணியிலுள்ள பழைய கைவிடப்பட்ட கல்குவாரி குட்டை நீரில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், தற்போது கோடை காலம் என்பதால், பொதுமக்கள் குறிப்பாக சிறுவர், சிறுமியர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளங்கள், ஏரிகள், அருவி மற்றும் ஆறுகள் போன்ற நீர்நிலைகளில் குளிக்கச் செல்கின்றனர். அவ்வாறு குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தவறி நீரில் மூழ்கி உயிரிழக்கும் துன்ப நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்நிகழ்வுகள் மிகுந்த மனவேதனையை அளிப்பதோடு பல குடும்பங்களை தீரா துயரிலும் ஆழ்த்தி விடுகின்றன.

இதனைத் தவிர்க்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகளை போதுமான பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டுமென்ற விழிப்புணர்வினை பொதுமக்களிடையே தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் தன்னார்வலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஏற்படுத்தவேண்டும் எனவும், மாவட்ட ஆட்சித் தலைவர்களும் போதிய கவனம் செலுத்தி பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM financial aid announced for 3 people lost their lives due to drowning in tiruttani


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->