#BREAKING || காவிரி ஆற்றில் மூழ்கி 4 கல்லூரி மாணவர்கள் பலி - முதல்வர் நிதியுதவி அறிவிப்பு - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நான்கு கல்லூரி மாணவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் 4 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகா, கல்வடங்கம் கிராமத்தில் ஓடும் காவிரி ஆற்றில் இன்று குளிக்கச் சென்ற தனியார் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் திரு மணிகண்டன், த/பெ.மணி (வயது 20), த/பெ.செல்வம் (வயது 20), திரு. மணிகண்டன் (வயது 20) முத்துசாமி, மற்றும் திரு.பாண்டியராஜன் (வயது 20) ஆகியோர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். 

உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM financial aid announced for 4 college students drowned in Cauvery river in salem


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->