நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்சம் நிவாரணம் - மு.க ஸ்டாலின் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி அருகே படமிஞ்சி கிராமத்தில் உள்ள செட்டி ஊருணியில் நேற்று அதே கிராமத்தைச் சேர்ந்த யாமினி, மகேந்திரன், மற்றும் சந்தோஷ் உள்ளிட்ட மூன்று சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக மூன்று சிறுவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஊருணியில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் உயிரிழந்த செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். 

இதேபோன்று, மயிலாடுதுறை மாவட்டதில் உள்ள, தரங்கம்பாடி வட்டத்தில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவன் அபினேஷ் என்பவர் தனியாருக்கு சொந்தமான மீன் வளர்ப்பு குட்டைக்கு குளிக்க சென்ற பொழுது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்ற செய்தினையும் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். 

இந்த நிலையில், நீரில் மூழ்கி உயிரிழந்த நான்கு சிறுவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM mk stalin allounce financial assistance to drowned children deied family


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->