பணியின் போது விபத்தில் சிக்கி உயிரிழந்த காவலர் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு - Seithipunal
Seithipunal


தஞ்சையில் வாகன சோதனையின் போது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த தலைமை காவலரின் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

தஞ்சாவூர் மாவட்டம், மெலட்டூர் காவல் நிலைய தலைமைக் காவலர், திரு.பழனிவேல் உதவி ஆய்வாளர் தலைமையில், குருங்களூர் வெண்ணாற்றுப் பாலம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவர் மீது அப்போது கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற இருசக்கர வாகனம் மோதியதில் காயமுற்று சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியினை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். இரவென்றும் பகலென்றும் பாராமல் தம் குடும்பத்தினரையும் மறந்து, நம் காவல் துறையினர் கடமையாற்றி வருகின்றனர்.

அந்தவகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த தலைமைக் காவலர் பழனிவேல் அவர்களின் அகால மரணம் காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஒரு பேரிழப்பாகும்.

உயிரிழந்த தலைமைக் காவலர் திரு. பழனிவேல் அவர்களின் குடும்பத்தினருக்கும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு, இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM mk stalin financial announce to police officer accident died family in thanjavur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->