ஆட்சி எப்போது முடியும் என்று மக்கள் காத்திருந்தனர் - கலாய்த்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டம், வாரணவாசி குழந்தைகள் மையத்தில், தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை களையும் நோக்குடன் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடி திட்டமான "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை ரூ. 22 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

மேலும், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் முடிக்கப்பட்ட பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் முக ஸ்டலைன் ஆற்றிய உரையில், " டிவியில் பிரச்னைகளைப் பார்த்து தெரிந்துகொள்பவன் இல்லை நான். தேர்தலுக்காக வருபவன் நான் இல்லை. மக்களின் தேவைக்காக வருகிறேன்.

மக்கள் தன்னை மறந்துவிடுவார்கள் என நினைத்து நாள்தோறும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார் எடப்பாடி பழனிசாமி. 

பொய்க்கு மேக்கப் போட்டால் அது உண்மையாகிவிடாது. அதிமுக ஆட்சி எப்போது முடியும் என்று மக்கள் காத்திருந்தனர். 4 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்ததாக சிரிக்காமல் பேட்டி கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி" என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM MK Stalin say about ADMK Govt And EPS


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->